காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
நியாய விலை கடையில் அரிசி வாங்குபவரா நீங்கள்..? ஜனவரி 1 முதல் புதிய உத்தரவு..!

நியாயவிலை கடையில் அரிசி வாங்குபவரா நீங்கள்?.. ஜனவரி 1 முதல் புதிய உத்தரவு..!
"ஜனவரி 1" முதல் கவனத்தில் நியாயவிலை கடையில் அரிசி வாங்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது தொடர்பான தகவல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மாத மாதம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி என்று வழங்கப்பட்டால், அதில் 15 கிலோ அரிசி மத்திய அரசாலும், 5 கிலோ அரிசி மாநில அரசாலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி தரப்படும் அரிசி மக்களுக்கு சரியான முறையில் கொடுக்கப்படுகிறதா?.
இதனை மக்களிடம் கேட்டால், அவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு சரியாக இல்லை. இதனால் ஜனவரி 1 முதல் மத்திய-மாநில அரசுகள் கொடுக்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது கொடுக்க வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபகழகம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் அரிசி வாங்கும் அனைவரும் தனித்தனியாக ரசீது கேட்டு வாங்க வேண்டும் என்றும், அப்படி ரேஷன் கடை நிர்வாகி கொடுக்க மறுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.