தமிழகம்

முன்னாள் திமுக எம்எல்ஏ சாலை விபத்தில் உயிரிழப்பு.. சோகத்தில் திமுகவினர்.!

Summary:

திமுகவின் முன்னாள் எம்எல்ஏவான மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவின் முன்னாள் எம்எல்ஏவான மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே தேசிய நெடுங்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் பலியாகியுள்ளார். இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் திமுக எம்எல்ஏ மனோகரன் உட்பட 2 பேர் பலியான சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதனையடுத்து பூவந்தி போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement