பெட்ரோலில் கலக்கப்படும் 10% எத்தனால்.! வாகன ஓட்டிகளே உஷார்.!

பெட்ரோலில் கலக்கப்படும் 10% எத்தனால்.! வாகன ஓட்டிகளே உஷார்.!


ethanol mixed in petrol

பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை உயர்த்துவதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது. எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதில் பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உலகிற்கே முன்னோடியாக திகழ்கின்றன. கரும்பு, மக்காச்சோளம் மற்றும் உருளைகிழங்கு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகள் கிடைக்கும். 

இந்தநிலையில், மத்திய அரசின் ஆணையின் படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன டேங்கிற்குள் தண்ணீர் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவுரை விடுத்துள்ளது.

ethanol

 அதாவது,வாகனத்தை கழுவும்போதும், மழை பெய்யும்போதும் பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்ரோல் டேங்கில் சேர்ந்த தண்ணீரால் ஏற்படும் விளைவுகளுக்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு. எத்தனால் உள்ள பெட்ரோலில் தண்ணீர் இறங்குவதால் வாகனத்தை இயக்குவது கடினம் என கூறப்பட்டுள்ளது.