தமிழகம்

காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில் இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்..! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..!

Summary:

Erode newly married couples attacked by family members

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த ஜோடியை பெண் வீட்டாரே கடத்திச்சென்று சிறைவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்ற இளைஞரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இருவர் வீட்டிற்கும் தெரியவர, இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் காவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஈஸ்வரன் என்பவர் இருவரையும் அழைத்து சென்று தனது வீட்டில் தங்கவைத்துள்ளார். பின்னர் காதல் ஜோடி இருவரும் அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, தங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்காத பெண்ணின் குடும்பத்தார் காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்த ஈஸ்வரனை தாக்கியதோடு காதல் ஜோடியையும் கடத்திச்சென்று பள்ளி ஒன்றில் சிறை வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் புதுமண தம்பதியினரை மீட்டதோடு, கடத்தலில் ஈடுபட்ட இளமதியின் தந்தை உட்பட 10 கும் மேற்பட்டவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர் 


Advertisement