சிறுமியை திருமணம் செய்து சட்டப்பாதுகாப்பு கேட்டு சவுடால்.. போக்ஸோ சட்டப்படி கவனித்த அதிகாரிகள்.!

சிறுமியை திருமணம் செய்து சட்டப்பாதுகாப்பு கேட்டு சவுடால்.. போக்ஸோ சட்டப்படி கவனித்த அதிகாரிகள்.!



erode-chennimalai-vellode-minor-aged-girl-married-using

16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில், இளைஞர் மற்றும் அவரின் தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை, வெள்ளோடு கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி மாயமாகிவிட்டதாக, அவரின் பெற்றோர் கடந்த 7 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

சிறுமி 10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், திடீரென மாயமானதால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருந்துள்ளனர். காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் முருகேசன், 16 வயது சிறுமியுடன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். மேலும், நாங்கள் திருமணம் செய்துள்ளோம், சட்டப்பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். 

erode

விசாரணையில், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த முருகேசன், கடந்த 8 மாதமாக சிறுமியிடம் காதலிப்பதாக நடித்து வந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி அவரை கிடாம்பட்டிக்கு அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணமும் செய்துள்ளார் என்பது அம்பலமானது.  

சிறுமிக்கு 16 வயதே ஆவதால், அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரிகள், சட்டப்பாதுகாப்பு கேட்டு வந்த முருகேசன் மற்றும் அவரின் தந்தை ரத்தினத்தை சட்டப்படி போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசனின் அண்ணன் பூபதியை தேடி வருகின்றனர்.