கைதாக போகிறாரா யாஷிகா ஆனந்த்..? நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு..! ரசிகர்கள் கலக்கம்...
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்; திமுக, நாம் தமிழர் கட்சியினர் மோதல்... காவல் துறையினர் குவிப்பு...!!
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்; திமுக, நாம் தமிழர் கட்சியினர் மோதல்... காவல் துறையினர் குவிப்பு...!!

திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதலால் இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளது. 25-ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
இன்னும் இரண்டு நாட்களில் பிரசாரம் நிறைவடைய உள்ளதால், தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து, நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது திடீரென திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் உண்டானது. இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர் மற்றும் மூன்று காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலை தொடர்ந்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதலில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோதலில் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு கட்சியினரும் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.