16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்?... தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் சிறுமியின் விபரீதத்தால் சோகம்.!

16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்?... தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் சிறுமியின் விபரீதத்தால் சோகம்.!


erode-16-aged-child-issue-minor-girl-suicide-attempt

கருமுட்டை திருட்டு, பாலியல் பலாத்கார வழக்கில் சிறுமி திடீர் தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை திருட்டு தொடர்பான சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயங்கரமும் வெளிவந்துள்ளது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஜான் உட்பட 4 பேர் ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்களின் மீது போக்ஸோ உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட ஈரோடு, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளில் விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு சம்மன் வழங்கி அதிரடி விசாரணை நடந்து வருகிறது. 

சிறுமி ஈரோடு ஆர்.என் புதூர் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி அனுபவித்த பாலியல் தொல்லை மற்றும் கருமுட்டை திருட்டு தொடர்பான பிரச்சனையால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில், நேற்று அமிலம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

சிறிது நேரத்தில் அமிலத்தின் வீரியம் உணர்ந்து காப்பக நிர்வாகிகளிடம் உண்மையை கூற, அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். சிறுமிக்கு பிரச்சனை இல்லை என்பது உறுதியாகவே, அவர் உறவினரின் வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். அதற்கு அனுமதி கிடைக்காததால் விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. 

சிறுமி இன்று மருத்துவமனையில் இருந்து காப்பகம் அழைத்து செல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிதளவு அமிலம் குடித்ததால் உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.