மேலே மின் கம்பி இருப்பதை அறியாமல் வயலில் இரும்பு குழாயை ஊன்றிய விவசாயி.! சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி!
மேலே மின் கம்பி இருப்பதை அறியாமல் வயலில் இரும்பு குழாயை ஊன்றிய விவசாயி.! சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அக்னிவீரன். விவசாயியான இவர் நேற்று காலை அவரது வயலுக்கு சென்று, வயலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி வயலில் நிறுத்தியுள்ளார்.
அவர் இரும்பு குழாயை ஊன்றி நிறுத்தும்பொழுது, மேலே சென்ற மின் கம்பி மீது இரும்புக் குழாய் பட்டதில் மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் அக்னிவீரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அக்னிவீரன் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அக்னிவீரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் அக்னிவீரனின் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகார் எடுத்துக் கொள்ள தாமதமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்னிவீரனின் உறவினர்கள் மதுரை-விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து விரைந்துவந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.