உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது! வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது! வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஊராட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது.இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும்.
2-ஆம் கட்ட தேர்தல் 30- ஆம் தேதி திங்கள் கிழமை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.