
கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத
கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொரோனா வேகமாக பரவிய நிலையில், அரசியல் கட்சிகள் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என தெரிவித்தனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் மே மாதம் 2 -ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.
அதில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும், வாக்கு எண்ணிக்கை தினத்தன்றோ அல்லது அதன் பிறகோ கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படும் என்று கருதுவதாலே தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement