உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? இன்று ஒரு முடிவு தெரிந்துவிடும்!

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? இன்று ஒரு முடிவு தெரிந்துவிடும்!



election judjement


வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.  வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட 12 தரப்பினர் தொடர்ப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. 

3 ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளையும் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

court

இந்தநிலையில் தி.மு.க.வின் மனுவில்  5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையம் நேற்று நடைபெற்றது. அந்த மனு மீதான விசாரணையின் போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், உள்ளாட்சி  தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது தேர்தல் நடத்த அனுமதி  கிடைக்குமா? என்பது இன்று காலை 10.30 மணிக்கு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.