திடீர் மூச்சுத்திணறல்.... சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் மருத்துவமனையில் அனுமதி..!!!
கற்பூரத்தால் சேலையில் தீப்பிடித்து சோகம்.. மூதாட்டி மூச்சுத்திணறி பலி.. வெளிநாட்டில் இருந்த மகன் கண்ட ஷாக் காட்சி.!
கற்பூரத்தின் தீ சேலையில் பிடித்து எரிந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகம் புழலில் நடந்துள்ளது.
தனியாக இருக்கிறார்:
சென்னையில் உள்ள புழல், காவாங்கரை, மாரியம்மன் நகரில் வசித்து வருபவர் செண்பகவல்லி (வயது 68). இவருக்கு மகன், மகள் இருக்கின்றனர். மகன் துபாயில் வசித்து வரும் நிலையில், மகள் திருவள்ளூரில் இருக்கிறார். இதனால் செண்பகவல்லி மட்டும் தனியாக வீட்டில் இருக்கிறார்.
இதையும் படிங்க: மது, கஞ்சா போதைக்கு அடிமை.. தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திவிட்ட பேரன்.. குலைநடுங்கவைக்கும் சம்பவம்.!
வீடியோ கால் கண்காணிப்பு:
தாயார் வீட்டில் தனியே இருப்பதால், அவரை கண்காணிக்க கேமிராவும் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. மேலும், தாயிடம் மகன் அவ்வப்போது வீடியோ காலும் பேசி வந்துள்ளார். இதனிடையே, துபாயில் இருந்தபடி தாயை கேமிராவில் கவனித்த மகன், தாயின் வீட்டில் புகைமூட்டமாக இருப்பதை கண்டுள்ளார்.

புகை மண்டலம்:
இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருப்போரை தொடர்புகொண்டு விபரத்தை தெரிவிக்கவே, அவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டில் புகைமண்டலமாக இருந்துள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செண்பகவல்லி தீக்காயத்துடன் இருந்துள்ளார்.
சேலையில் தீ:
பூஜை அறையில் கற்பூரத்தில் ஏற்றிய தீ, அவரின் சேலையில் பரவி பின் மயங்கியது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செண்பகவல்லி தீக்காயத்துடன் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த புழல் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!