போதையில் பைக்கை கொளுத்திய ஆசாமி! கடலூரில் சலசலப்பு!!Drunken man fired bike in cuddalore

டலூரில் பாரதி சாலை அருகே பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது போதையில் அந்த பைக் அருகே வந்த போதை ஆசாமி ஒருவர், தன்னை அந்த பைக் தள்ளி விட்டதாக அவரே நினைத்துக் கொண்டு அந்த பைக்கை தீ வைத்து கொளுத்திய உள்ளார். 

போதை ஆசாமியின் செயலால் அந்த இடம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைக்கு நடுவே பைக் தீயிட்டு கொளுத்திய நிலையில் சிறிது நேரத்திற்கு அங்கு போக்குவரத்தும் பாதித்துள்ளது. 

பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த பைக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அந்த பகுதி வழக்கமான நிலைக்கு திரும்பியது.