தமிழகம்

கணவரை பிரிந்து வேறு நபருடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையான 35 வயது பெண்.! இறுதியில் நடந்த விபரீதம்.!

Summary:

திருப்பத்தூரில் குடிக்கு அடிமையான கள்ளக்காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்துார் மாவட்டத்தில் தியாகு என்பவர் கழிவறை சுத்தம் செய்யும் வேலை செய்துவந்துள்ளார். இந்தநிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவர் மனைவி புவனேஸ்வரி இருவரும் தியாகுவிடம் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தியாகுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளகாதலாக மாறியது.

இதுகுறித்து தகவலறிந்த புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்பை கைவிடவில்லை. இதனால் புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். இதனையடுத்து தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் குடிக்கு அடிமையாகி உள்ளனர். குடிக்கு அடிமையானதால் உடல்நிலை கோளாறு ஏற்பட்ட தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு காலகட்டத்தில் மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.

இந்தநிலையில், புவனேஸ்வரிக்கு தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார். இதனால் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement