மது போதையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபர்கள்.!



drunk Teenagers forcing an 11th grader to fall in love

தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என நினைத்து பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். மதுவுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியும் தற்போதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை. தற்போது மதுவினால் குற்றங்கள் பல அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 22 வயது நிரம்பிய இவரது நண்பர்கள் மூர்த்தி, சேகர், சந்தோஷ், மனிகண்டன் ஆகியோர் நேற்று இரவு மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி, ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.