தமிழகம்

ஹெவி லைசன்ஸ் எடுக்க இனி கல்வி தகுதி தேவை இல்லை! குஷியில் பாமர மக்கள்!

Summary:

don't need educational qualification for heavy license.

மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம் என இருந்தது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் கல்வி தகுதி இல்லாததால் கனரக வாகனங்கள் இயக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் தற்போது கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்களை ஓட்டும் நிலை உள்ள காரணத்தால் ஓட்டுனர் பற்றாக்குறை அதிகம் இருந்து வந்தது. 

இதனால் கனரக வாகன உரிமையாளர்கள், கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 

இதனையடுத்து தமிழக போக்குவரத்து துறை, கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்களிடம் கல்வித்தகுதி சான்றிதழ்கள் கேட்கப்படாது எனவும், இதனை பொது மக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டும் படியும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் ஏராளமான மக்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறமுடியாமல் இருப்பவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement