ஜஸ்ட் மிஸ்.. பற்றி எரிந்த கார்.! தக்க நேரத்தில் உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய செல்ல நாய்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

ஜஸ்ட் மிஸ்.. பற்றி எரிந்த கார்.! தக்க நேரத்தில் உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய செல்ல நாய்.! நெகிழ்ச்சி சம்பவம்.!



dog-saves-his-owner-from-car-fire-accident

கரூர் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவர் கரூர் எறிபந்து கழக துணைத் தலைவராக உள்ளாராம். மணி 6 வயதில் டாபர்மேன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது வளர்ப்பு நாயுடன் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலைக்கு தங்களது உறவினர்களை பார்க்க காரில் சென்றுள்ளார்.

அப்பொழுது கார் கரூர் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பக்கத்தில் புகை கிளம்பியுள்ளது இதனை கண்ட நாய் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடும் வகையில் பயங்கரமாக குரைத்தவாறே வந்துள்ளது.  அதனைத் தொடர்ந்து மணி காரை நிறுத்தி அவசரஅவசரமாக டாபர்மேன் நாயை கீழே இறக்கி அங்கிருந்த தடுப்பு கம்பியில் கட்டியுள்ளார். பின் திரும்பியபோது கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது நீரை பாய்ச்சி அணைக்க முற்பட்டுள்ளனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. தனது உரிமையாளரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அந்த டாபர்மேன் நாயை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.