இளைஞரை கடித்த வெறிநாய்.. 2 மாதங்களுக்கு பின் படிப்படியாக நேர்ந்த கொடுமை.! 

இளைஞரை கடித்த வெறிநாய்.. 2 மாதங்களுக்கு பின் படிப்படியாக நேர்ந்த கொடுமை.! 


Dog attacked thiruvallur youngster and death

திருவள்ளுரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறிநாய் கடித்து 2 மாதங்களுக்கு பின் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வெறிநாய் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பின், இளைஞர் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் மிகவும் அலட்சியமாக இருந்து வந்துள்ளார். அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாத காரணத்தால் நாய் கடி தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. 

dog

வீட்டிலேயே இருந்த அவர் தனக்குத்தானே தனியாக பேசிக் கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

dog

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பதை கண்டறிந்தனர். அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி தற்போது அவர் உயிரிழந்து இருக்கிறார்.