தமிழகம்

காதில் கட்டி! வலியால் துடிதுடித்த 9வயது சிறுமிக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்!!

Summary:

Doctors mistakely done operation

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பட்டரவாக்கம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ. இவர் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜஸ்ரீக்கு காதுபகுதியில் கம்மல்  போடும் இடத்தில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்ரீயின் பெற்றோர்கள் அவரை அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்னர்.
 
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நேற்று ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும்  மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுவன் ஒருவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி செய்துவிட்டதாக மருத்துவதரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதாக மருத்துவமனை கூறியுள்ளது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement