தமிழகம்

அடுத்தவாரம் திருமணம்.! புதுக்கோட்டை தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை.!

Summary:

வரும் 30- ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்தவர் பாலசந்தர். இவர் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். இவரது தோட்டத்தில் அடக்கமுடியாத வீரமிக்க இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். 

பாலசந்தருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு வரும் 30- ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை பாலசந்தர் அவரது தோட்டத்துக்கு காரில் சென்று அங்கு தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு ஒரு மர்ம கும்பல் திடீரென வந்து அவரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல காரில் ஏறியபோது அந்த கும்பல் காருக்குள் வைத்தே பாலச்சந்தரை சரமாரியாக வெட்டியியுள்ளனர். தன்னை தடுக்கவந்த பாலச்சந்தரின் கார் டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர்கள் வெட்டியதில் பாலச்சந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவத்தையடுத்து பாலசந்தரின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போலீசார் பாலசந்தரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement