தமிழகம்

இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைந்துவிட்டது..! தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மிக கவலைக்கிடம்..!

Summary:

DMK MLA J Anbalagan health update

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாவும், தற்போது எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டையிலுள்ள ரேலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெ. அன்பழகனுக்கு 80 சதவீதம் வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டநிலையில் அதன்பின்னர் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு 60 சதவீதமாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேறிவருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், தற்போது 90 சதவீதம் வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும், சீறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.


Advertisement