திமுக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை.? வெளியான உத்தேசப்பட்டியல்.!

திமுக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை.? வெளியான உத்தேசப்பட்டியல்.!



dmk minsters

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக, தனித்து 125 இடங்களை பிடித்து, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்தநிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

அதன்படி நாளை மறுதினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் புதிய அமைச்சர்களாக, அதிகாரிகளாக யார் யார் பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம், அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் அளித்தார். நீர்பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக ஏ.வ வேலு, உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.என் நேரு, சுகாதாரத்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.