சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
தரைமட்டமாகும் தேமுதிக கட்சி அலுவலகம்! அதிர்ச்சியில் விஜயகாந்திற்கு உடல்நல குறைவா!
தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். அனல் தெறிக்கும் வசனங்கள், அதிரடி சண்டை காட்சிகள் என படம் முழுவதும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் விஜயகாந்திற்கு நிகர் அவர் மட்டுமே.
சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்த விஜகாந்த்திற்கு ஆரம்பல காலத்தில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அவருக்கு அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைவால் அவரால் முழுநேர அரசியலில் ஈடுபட முடியவில்லை. மேலும் கட்சி சம்பந்தமாக எந்த ஒரு அழுத்தமான முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லை என்பதும் தெரியவருகிறது.
அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த முறை அவருக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் முழுமையாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு இந்த ஒரு விஷயம் தான் காரணமாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. அப்படி என்னதான் நடந்துவிட்டது?

அவருக்கு கவலையெல்லாம் அவருடைய கட்சியை பற்றியும் தொண்டர்களை பற்றியும் மற்றும் கட்சி அலுவலகத்தை பற்றியும் தான் இருக்கும். இந்தநிலையில் அவருடைய தேமுதிக கட்சி அலுவலகம் தரைமட்டமாக போகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டால் அவருடைய மனது எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும். நல்ல உடல் நிலையில் இருப்பவர்களுக்கு கூட இந்த செய்தி வேதனையை கொடுக்கும் ஏற்கனவே உடல்நலம் குன்றி இருக்கும் விஜயகாந்திற்கு சொல்லவா வேண்டும்.
சென்னை கோயம்பேடு அருகே தேமுதிக கட்சியின் அடையாளமாக இருந்து வருகிறது விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம். ஏற்கனவே திமுக கட்சிக்கு எதிராக எவ்வளவோ போராடியும் அந்த மண்டபத்தில் பாதி கட்டிடம் இடிக்கப்பட்டது. மீதமுள்ள கட்டிடத்தில்தான் இன்று தேமுதிக கட்சி அலுவலகம் இருந்து வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள அந்த கட்டிடமும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக இடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனென்றால் மெட்ரோ ரயில் நிர்வாக பணி தற்போது கோயம்பேட்டில் நடந்து வருகிறது. அதற்காக கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கம் செய்ய முனைந்தால், இடையூறாக உள்ள கடைகள், வீடுகள் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்படி கையகப்படுத்தும் நிலங்களில் விஜயகாந்தின் மண்டபமும் அடிபடுகிறது. இன்னும் சரியாக சொல்வதானால், மண்டபம் இருக்கும் இடத்தில்தான் மெட்ரோ ரயிலின் வேலையே நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.