குளத்தில் தவறி விழுந்து தாய் கண்முன் பலியான 13 வயது சிறுமி; கால் இடறியதால் நடந்த சோகம்.!

குளத்தில் தவறி விழுந்து தாய் கண்முன் பலியான 13 வயது சிறுமி; கால் இடறியதால் நடந்த சோகம்.!


Dindigul Vedachandur Minor Girl Died 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரின் மனைவி தெய்வானை. தம்பதிகளுக்கு 13 வயதுடைய நித்யா என்ற மகள் இருக்கிறார். 

சிறுமி நித்யா கேரளாவில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழவுக்காக சொந்தவூர் வந்துள்ளார். 

அங்கு துணிகளை துவைக்க குளத்திற்கு சென்றபோது, பாறை வழுக்கி சிறுமி நீருக்குள் விழுந்துள்ளார். சிறுமி நீரில் விழுந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், அரைமணிநேரத்திற்கு பின் அவரின் சடலத்தை மீட்டு வேடசந்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரைமணிநேரம் முன் தன்னிடம் சிரித்து பேசிய மகள் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ள இயலாத தாய் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.