பழனி பாதையாத்திரை பயணத்தில் பரிதாபம்: கார் மோதி தந்தை - மகன் உட்பட 3 பக்தர்கள் பரிதாப பலி.!

பழனி பாதையாத்திரை பயணத்தில் பரிதாபம்: கார் மோதி தந்தை - மகன் உட்பட 3 பக்தர்கள் பரிதாப பலி.!


dindigul-palani-car-accident-pedestrians-3-died

பாதையாத்திரை சென்ற பக்தர்களின் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சத்திரப்பட்டி பகுதியில் பாதையாத்திரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற கார், 5 பேரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. 

இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த தந்தை மகனான சாமிதான் - கமலேஷ், இவர்களின் உறவினர் சேகர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனருக்கு வலைவீசியுள்ளனர்.

Dindigul

விபத்தை ஏற்படுத்திய கார் பழனி, ஆயக்குடி பகுதியில் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் உரிமையாளர் யார்? விபத்து தற்செயலா? அல்லது திட்டமிட்ட கொலையா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.