தமிழகம்

மசாஜ் சென்டர் பெயரில் அந்த வேலை.. ரெய்டு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக்.. கேரள பெண்கள் மீட்பு.!

Summary:

மசாஜ் சென்டர் பெயரில் அந்த வேலை.. ரெய்டு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக்.. கேரள பெண்கள் மீட்பு.!

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், டிப்போ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொடைக்கானல் காவல் துறையினர் அதிரடியாக திடீர் சோதனையை மேற்கொண்டனர். மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பது உறுதியான நிலையில், நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ஜனகராஜ், சரண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அதனைத்தொடர்ந்து, மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் நடத்தி வந்த 3 பேரையும் சிறையில் அடைத்தனர். 


Advertisement