சரக்கடித்த நட்புகளுக்குள் தகராறு.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு நண்பனை கொலை செய்த பயங்கரம்.!

சரக்கடித்த நட்புகளுக்குள் தகராறு.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டு நண்பனை கொலை செய்த பயங்கரம்.!


Dindigul Friend Kills by 2 Another Friends Police Arrest Both When Drunk Liquor Clash

மதுபோதையில் கூடுதலாக பணம் கேட்ட நண்பனை, 2 நண்பர்கள் சேர்ந்து தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுபட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவர் அருள் விசுவாசம் (வயது 35). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும், மதுபானம் அருந்தும் பழக்கத்தையும் வைத்துள்ளார். இதனால் தினமும் வேலையை முடித்துவிட்டு, நண்பர்களுடன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். 

வேலை கிடைக்காத சமயங்களில் யாரிடம் இருந்தாவது பணம் வாங்கி மதுபானம் அருந்தி வந்துள்ளார். நேற்று இரவில் தனது நண்பர்கள் ஆரோக்கிய ஸ்டீபன் (வயது 35), செபஸ்டியன் (வயது 35) ஆகியோருடன் மதுபானம் அருந்த, வடக்கு ரத வீதியில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு சென்றுள்ளார். 

Dindigul

அப்போது, அருள் விஸ்வாசத்திடம் பணம் குறைந்தளவே இருக்கவே, நண்பர்களிடம் மதுபானம் வாங்க கடன் கேட்டுள்ளார். அவர்கள் கொடுத்த பணத்தை வைத்து, 3 பேரும் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அருள் மேலும் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்கவே, நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்கள் இருவரும் அருள் விசுவாசத்தை கீழே தள்ளி, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். நிகழ்விடத்திலேயே அருள் விசுவாசம் உயிரிழந்துவிட, இந்த விஷயம் தொடர்பாக வடக்கு நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அருள் விசுவாசத்தின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.