நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
மீன்பிடி குத்தகை முன்விரோதம்.. நண்பர்கள் கண்முன்னே குத்தகைதாரர் சுட்டுக்கொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்.!
மீன்பிடி குத்தகை முன்விரோதம்.. நண்பர்கள் கண்முன்னே குத்தகைதாரர் சுட்டுக்கொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்.!

செட்டிகுளத்தில் மீன்பிடி காண்ட்ராக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவர் அதே பகுதியில் இருக்கும் செட்டிகுளத்தில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலருடன் ராகேஷ் குமாருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் செட்டிகுளத்தில் இருந்த போது, அங்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
நண்பர்களுடன் இருந்த ராகேஷை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல், துப்பாக்கியால் வயிற்றில் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ராகேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.