காட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி கசமுசா.. கிணற்றுக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!

காட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி கசமுசா.. கிணற்றுக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!


Dindigul Affair Girl Enjoy With Boy Friend Baby Died slip Well

 

கிணற்றுக்கு அருகே குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக தாய் இருக்க, ஒன்றுமே அறியாத பிஞ்சு நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரின் மனைவி துர்கா தேவி (வயது 28). தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. 

இதற்கிடையில், துர்கா தேவிக்கும் - அப்பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி கள்ளக்காதல் ஜோடி காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில், துர்கா தேவியின் குழந்தையை அங்குள்ள கிணற்றுக்கு அருகே விட்டுவிட்டு இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Dindigul

அந்த சமயத்தில் அங்கும் இங்குமாக வேடிக்கை பார்த்து கிணற்றுக்கு அருகே சென்ற குழந்தை, தவறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் இறப்பு செய்தி காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது 

இதனையடுத்து, துர்கா தேவியிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் நடத்தி வந்த விசாரணையில், மேற்கூறிய உண்மை சம்பவம் அம்பலமானது. இதன்பின் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.