யாகத்தீயில் தெரிந்த அம்மன் உருவம்!,, பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்!.. கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு..!

யாகத்தீயில் தெரிந்த அம்மன் உருவம்!,, பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்!.. கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு..!


Devotees are engrossed in ecstasy at the sight of the Goddess in the yaga fire

திண்டுக்கல் அருகே கோவில் குடமுழுக்கு விழாவிற்காக யாகம் வளர்த்ததில் அதில் இருந்து எழுந்த யாகத்தீயில் அம்மன் உருவம் தெரிந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கம்மாள்நகர் பைபாஸ் ரயில்வே மேம்பாலம் அருகில் புதிதாக கட்டப்பட்ட வழித்துணை மாரியம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 2 நாட்களாக யாக வேள்வி பூஜைகள் நடைபெற்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகத்துக்கு முன்பாக கோவில் முன்பு நடந்த யாக வேள்வு பூஜையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

யாகத்தில் இருந்து வெளி வந்த தீயில் அம்மன் உருவம் தெரிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். யாகத்தீயில் தெரிந்த அம்மன் உருவத்தை அனைவரும் பரவசத்துடன் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். யாகத்தீயில் அம்மன் உருவம் தெரிந்தது குறித்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.