தமிழகம்

வேகமாக பரவும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல்!!

Summary:

dengu-death

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. 

அரசு பொது மருத்துவமனை kovai க்கான பட முடிவு
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அரசு பொது மருத்துவமனையில் பதிவான தகவல்களின்படி இதுவரை 917 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். தற்போது சுமார் 600 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்ச க்கான பட முடிவு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேர் உயிரிழிந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 2700 பேர் டெங்கு காய்ச்சலுக்குசிகிச்சை பெற்றுவருதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்ச க்கான பட முடிவு
இன்று நிலவரப்படி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 14 வயது சிறுமி, தொண்டாமுத்தூர், கதிர்வேல் ஆகியோர் பன்றிகாய்ச்சலுக்கும், மேட்டுப்பாளையம் போத்திராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்கும் உயிழந்தனர்.உங்கள் பகுதியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பற்றிய தகவலை கீழே கமெண்ட் செய்யவும்.

 


Advertisement