தமிழ்நாட்டுல இவ்வளவு பிரச்சனைக்கும் அந்த வைரஸ்தான் காரணம்!! ஆய்வில் வெளியான முக்கிய தகவல்..

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் 70 % பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகம் கொரோனா 2 வது அலையில் மோசமான தாக்கங்களை சந்தித்தது. நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் 35 ஆயிரத்துக்கு அதிகமாகவும், 400 கும் அதிகமான மக்கள் நாள்தோறும் பலியாகிவந்தனர்.
தற்போதுதான் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, அன்றாட பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. தமிழகத்தில் இந்த மோசமான பாதிப்புகளுக்கு காரணம் இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸே. இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆய்வில், இரண்டாம் அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதற்கு டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் காரணம் என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையில் “கொரோனா பாதிக்கப்பட்ட 554 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 70% சதவிகிதம் பேருக்கு டெல்டா (B.1.617.2) வகை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
அதில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 13 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4% பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்களில் 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு பொது சுகாதாரத்துறையின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.