தமிழகம்

உயிரோடு இருக்கும் இளம்பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தந்தை! அதிர்ச்சி காரணம்!

Summary:

death poster for daughter


வேலூர் மாவட்டத்தில் உள்ளது குப்பராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் என்பவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் எங்களது மகள் அர்ச்சனா அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம். இவரது பூவுடல் 10.6.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என பிரிண்ட் செய்து பேனர் அடித்து அவர்கள் வசிக்கும் தெருவில் கட்டி வைத்துள்ளார் சரவணன்.

இந்த பேனர் அந்த ஊர் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அதற்கு காரணம் அர்ச்சனா இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் உள்ளார். அர்ச்சனா அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார். அவர் வேறு சாதி என்பதால் அவரது காதலை ஏற்கவில்லை.

இதனால் கடந்த வாரம்  தனது வீட்டில் இருந்து வெளியேறி காதலனை மணந்துள்ளார் அர்ச்சனா. இதனால் அதிருப்தியான அர்ச்சனாவின் குடும்பத்தார், தனது மகள் இறந்துவிட்டதாக பேனர் வைத்துள்ளனர். அதன்மூலம் மகளுக்கு வெறுப்பை காட்டுகிறார் தந்தை சரவணன்.
 


Advertisement