"எல்லாம் வல்ல தாயே".... பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த கலைஞர்.! என்ன நடந்தது.?

எல்லாம் வல்ல தாயே.... பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த கலைஞர்.! என்ன நடந்தது.?


dancer died while dancing

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ் நிகழ்ச்சியில் குழுவினருடன்  நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது "எல்லாம் வல்ல தாயே".... என்ற பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் காளிதாஸ் நெஞ்சை பிடித்த படி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். பின்னர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே காளிதாஸின் உயிர் பிரிந்தது.

இதனைப்பார்த்த விழாக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பேரதிர்ச்சியடைந்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.