அரசியல் தமிழகம்

கோவில் திருவிழா வேணாம்! தேர்தல் பிரச்சாரம் போதும்! குஷியில் மக்கள்!

Summary:

Dance program in election canvas

 

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் நடக்கும் பல இடங்களில், ஆடல் பாடல் நிகழ்ச்சியும், குத்தாட்டமும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் வேட்பாளர் பேசும் பேச்சை கேட்க வருகிறார்களா? இல்லை ஆடல் பார்க்க வருகிறார்களா என்றே தெரியவில்லை. வாக்கு சேகரிக்கும் இடத்தில் மேடை அமைத்து முதலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதன் பிறகு தான் பல இடங்களில் வாக்கு சேகரிப்பு தொடங்குகிறது. இது திருவிழா காலங்கள் என்பதால் கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் நடக்கும் ஆடல் பாடல்களை திருவிழா நிகழ்ச்சியை போல் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

 


Advertisement