பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்த மகன்! அடித்தே கொலை செய்த தந்தை!



dad killed his son

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது மூத்த மகன் ரஞ்சித் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்று, அவரது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி விடுமுறைக்காக ரஞ்சித் அவர் மட்டும் புதுச்சேரி வந்துள்ளார். 

ரஞ்சித் பிரான்சிலிருந்து வந்ததிலிருந்தே தனது தந்தை குமாரிடம், 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குமார் சொத்தை பாகம் பிரித்து பிறகு பணம் தருவதாக ரஞ்சித்திடம் கூறியதாக தெரிகிறது.

தந்தையின் பேச்சை மறுத்த ரஞ்சித், தினந்தோறும் குடித்துவிட்டு தனது தந்தை குமாரிடம் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரஞ்சித், தந்தையிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

son

ரஞ்சித்தின் கொடுமையை தாங்கமுடியாத குமார், கரப்பான்பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்து, கீழே விழுந்த ரஞ்சித்தின், கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, இரும்பு கம்பியால் ரஞ்சித்தின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். 

அதில் பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரிகிறது. மகனை கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்திற்கு சென்று தந்தை குமாரே புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.