சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
தினம் போதையில் சண்டை; கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது.!
போதையில் தகராறு செய்யும் கணவனை மனைவி விண்ணுலகம் அனுப்பி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி தம்பிக்கோட்டை கிராமத்தைச் சார்ந்தவர் கரும்பு தோட்டத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், திடீர் திருப்பமாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் தொடர்ந்து மதுபானம் அருந்திவிட்டு மனைவியை அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற பெண்மணி, மதுவில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் மனைவியின் வாக்குமூலத்தை பெற்ற காவல் துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.