பட்டதாரி பெண்ணை காதலித்து, கருவை கலைக்கவைத்து கைவிட்ட பொறியாளர்.. ஆப்படித்த மகிளா நீதிமன்றம்.!

பட்டதாரி பெண்ணை காதலித்து, கருவை கலைக்கவைத்து கைவிட்ட பொறியாளர்.. ஆப்படித்த மகிளா நீதிமன்றம்.!


Cuddalore Virudhachalam Thittakudi Engineer Cheats Woman Court Announced 10 year Prison

உறவினர் வீட்டிற்கு சென்று வரும் சமயத்தில் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி கற்பழித்து கைவிட்ட இளைஞருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கீழ்செருவாய் கிராமத்தில் வசித்து வருபவர் ரத்தினம். இவரின் மகன் பிரதாப் (வயது 27). பிரதாப் பொறியாளராக இருந்து வருகிறார். இவர் திட்டக்குடி பி. இளமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு சென்று வரும் போது, அதே பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி பி.எட் பயின்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். 

இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த பிரதாப், அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார். இதனால் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். 

Cuddalore

இந்த தகவலை காதலனிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளக்கூறி காதலி வற்புறுத்தவே, கருவை கலைத்துவந்தால் திருமணம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். காதலனின் வார்த்தையை நம்பிய இளம்பெண்ணும் கடந்த 2015 ஆம் வருடம் ஜூன் 23 ஆம் தேதி கருவை கலைத்த நிலையில், திருமணம் செய்ய பிரதாப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017 ஆம் வருடம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பிரதாப்பை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பிரதாப்புக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.