அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்.. திடீர் போராட்டத்தால் பரிதவித்துப்போன மக்கள்.. குவிந்த அதிகாரிகள்.!

அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்.. திடீர் போராட்டத்தால் பரிதவித்துப்போன மக்கள்.. குவிந்த அதிகாரிகள்.!


cuddalore-thittakudi-govt-bus-employees-protest

அரசு பேருந்து ஓட்டுனரை இளைஞர்கள் கும்பல் தாக்கியதால், இன்று காலை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி நகரில் இருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அரசு பேருந்து நேற்று இரவு பயணம் செய்தது. பேருந்து தொழுதூர் ஆ. பாளையம் அருகே வந்தபோது, அவ்வூரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலத்தை கடந்து சென்றுள்ளது. இந்த சமயத்தில் பேருந்தால் சாமி சிலை சேதமடைந்தததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆ. பாளையம் ஊர் தரப்பு இளைஞர்கள், பேருந்தின் ஓட்டுநர் பெரியசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஓட்டுநர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு, அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். 

Cuddalore

ஓட்டுனரின் மீது தாக்குதல் நடந்த விவகாரம் சக ஓட்டுனர்களுக்கு தெரியவரவே, இன்று காலை 40 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திட்டக்குடியில் போக்குவரத்து ஸ்தம்பிக்க, பள்ளி-கல்லூரி செல்லும் மாணாக்கர்கள், வேலைகளுக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். 

போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சிலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து இயக்கப்பட்டது.