சிங்கப்பூருக்கு விசா கொடுப்பதாக மோசடி; 45 பாஸ்போர்ட்களுடன் கைதான சாமி.. மதுரையில் பேரதிர்ச்சி.!CUDDALORE MAN CHEATED BY MADURAI MAN

வெளிநாட்டில் வேலை என்று ரூ.1 இலட்சம் வாங்கி மோசடி செய்த நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லபெரட்டிபாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் வாசு. இவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில், கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை வைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை நம்பி ரூபாய் ஒரு லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அவர் சிங்கப்பூருக்கு விசாவை விரைவில் அனுப்புவதாக கூறிய நிலையில், பின்னர் எதுவும் தகவல் கிடைக்கவில்லை. 

Cuddalore

இதனால் சந்தேகமடைந்த வாசு, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், மதுரையில் இருந்த பாண்டியனை கைது செய்து 45 பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இவரிடம் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.  பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் பாரதிராஜா என்பவரை தேடி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.