28 வயது இளம்பெண்ணை அடித்துக்கொன்ற 65 வயது கிழவன்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் பகீர் செயல்.! சிதம்பரத்தில் கொடூரம்.!



Cuddalore Chidambaram Women Killed

Chidambaram Women Murder: ஆசைக்கு இணங்க மறுத்த 28 வயது இளம்பெண்ணை 65 வயது கிழட்டுக் காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த விவகாரம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது. 

குடும்ப கடன்: 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், அண்ணாமலை நகர், மீதிக்குடி நகர், செங்கமேட்டு தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 33). இவரின் மனைவி காமாட்சி (வயது 28). தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மீதிக்குடி நடுத்தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன் (வயது 65). காமாட்சி குடும்ப செலவுக்காக மகேந்திரனிடம் பணம் வாங்கி இருக்கிறார். இதற்காக தவணையும் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

Crime news

கொலை சம்பவம்:

இதனிடையே, இன்று காலை காமாட்சி மகேந்திரனின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட நிலையில், மகேந்திரன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து காமாட்சியின் தலையில் அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து விழுந்த காமாட்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

Crime news

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை:

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணை, கடன் கொடுத்த மகேந்திரன் தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனிடையே, இன்று வீட்டுக்கு வந்த காமாட்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில், ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்குள் கள்ளக்காதல்.. தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூர கொலை.. புதரில் நடந்த பயங்கரம்.!