பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கத்தியை காட்டி மிரட்டி பாலில் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்..!
பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கத்தியை காட்டி மிரட்டி பாலில் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து வேலூரை சேர்ந்த அப்பெண் தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு தனது ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றன.