ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள்? ஜெ.தீபாவிடம் நீதிமன்றம் கேள்வி!

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள்? ஜெ.தீபாவிடம் நீதிமன்றம் கேள்வி!


court question to j dheepa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இதனையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன்வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிஉள்ளது. ஆகவே, அதுதொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஜெயலலிதா பயன்படுத்திய விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், கலைப் பொக்கிஷங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

j dheepa

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.