தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்! முழுவிவரம் இதோ!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்! முழுவிவரம் இதோ!



cororo-affected-count-as-districtwise

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கு மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும், வீட்டுக்குள்ளே சமூக விலகலை  பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Coronovirus

தமிழகத்தில் 621பேரில் சென்னையில் 110 பேர், கோவையில் 59 பேர், திண்டுக்கலில் 45 பேர், நெல்லையில் 38 பேர், ஈரோட்டில்  32 பேர், திருச்சியில் 30 பேர், நாமக்கல்லில் 28 பேர், ராணிப்பேட்டையில் 25 பேர், செங்கல்பட்டில் 24 பேர், தேனி  23 பேர், கரூரில் 23 பேர், மதுரையில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் விழுப்புரத்தில் 16 பேர்,  கடலூரில் 13 பேர், சேலம் 12 பேர், திருவள்ளூர் 12 பேர், திருவாரூர் 12பேர், நாகையில் 11பேர்,  தூத்துக்குடியில் 11 பேர் விருதுநகரில் 11பேர்,  திருவண்ணாமலையில் 9 பேர், தஞ்சாவூர் 8 பேர், திருப்பூர் 7 பேர், சிவகங்கை 5 பேர், வேலூரில் 5பேர்,  நீலகிரியில் 4பேர், கள்ளக்குறிச்சி 2 பேர், ராமநாதபுரம் 2பேர் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.