தமிழகத்தில் நான்காயிரத்தை தாண்டிய கொரோனா..! இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா..! மொத்த எண்ணிக்கை 4058 ஆக உயர்வு.!



corono-tamilnadu-current-count-status

தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது . இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வைரஸின் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

corono

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3023 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இரண்டே நாட்களில் ஆயிரத்தை கடந்து தற்போது மொத்த எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.