தமிழகம் Covid-19

81 பேருடன் முதல் இடத்தில் சென்னை..! எந்த மாவட்டத்தில் எத்தனை பேர்.? மாவட்ட வாரியாக வெளியான கொரோனா பட்டியல் இதோ.!

Summary:

Corono tamil nadu district wise count

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்தவர்கள் மூலம் சில நாட்களிலையே பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வரை 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 81 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 43 பேருடன் திண்டுக்கல் இரண்டாவது இடத்திலும், 36 பேருடன் நெல்லை மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளது.

மேலும், ஈரோடு 32, கோவை 29, தேனி 21 , நாமக்கல் 21, கரூர் 20, செங்கல்பட்டு 18, மதுரை 15, விழுப்புரம் 13, திருவாரூரில் 12 பேர், விருதுநகர் 11, திருப்பத்தூர் 10 தூத்துக்குடி 9, சேலத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை, நாகையில் தலா 5 பேரும், காஞ்சிபுரத்தில் 4 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருப்பூரில் தலா ஒருவருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement