
Corono positive cases in india state wise
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக கேரளா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 1965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335 ஆக உள்ள நிலையில், அம்மாநிலம் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. 265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா பயம் சற்று குறைவாக இருந்த தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது. 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது தமிழகம்.
இதற்கு அடுத்தபடியாக, டெல்லி (152), கர்நாடகா (110), ராஜஸ்தான் (108) போன்ற மாநிலங்கள் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement