தமிழகம் Covid-19 Corono+

கட்டுக்குள் வந்த கொரோனா..! இன்னும் 3 அல்லது 4 நாட்களில் மொத்தமா காலி.! குட் நியூஸ் சொன்ன முதல்வர்.

Summary:

Corono may disappear from tamilnadu in 3 to 4 days says TN CM

தமிழகத்தில் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு பூஜ்யம் என்ற அளவுக்கு வந்துவிடும் என தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஊரடங்கு சமயத்தில் மக்களுக்கு தேவையான அணைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது.

தமிழகம் கொரோனா பரவளில் இரண்டாவது ஸ்டேஜில்தான் உள்ளது. கொரோனா அறிகுறி உடையவர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 , 38 என குறைந்துள்ளது.

இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறும் என நம்புகிறோம். அதேபோல், இதுவரை 150 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள நோயாளிகளும் விரைவில் குணமடைவார்கள் என முதல்வர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


Advertisement