தமிழகம் Covid-19

சென்னையில் கட்டுக்கடங்கா கொரோனா..! நேற்றுமட்டும் 203 பேருக்கு நோய்த் தொற்று..! மாநிலத்தில் 50 சதவீதம் சென்னையில் பாதிப்பு.!

Summary:

Corono latest update in chennai

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது.

இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக மூன்று கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா சமீப காலமாக பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்றுமட்டும் தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சகட்டமாக சென்னையில் மட்டும் 1,458 பேருக்கு இதுவரை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ளது.


Advertisement