தமிழகம்

18 வயது இளைஞனுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டது எதனால் தெரியுமா?

Summary:

Coronavid19

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600க்கும் மேற்ப்பட்டதாக உயர்ந்துள்ளது.

மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக மூன்று பேருக்கு இந்நோய் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. 

அதில் 18 வயது இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நபருக்கு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரிடமிருந்து பரவி உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த இரண்டாவது நபர் குணமாகி இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லவுள்ளார் என கூறப்படுகிறது. 


Advertisement